ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி புதிய சாதனை

83பார்த்தது
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி புதிய சாதனை
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 100 சிக்ஸர்களை அடித்து சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 97 சிக்ஸர்கள் அடித்திருந்ததே ஐபிஎல் தொடர் ஒன்றில் அந்த அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது.

தொடர்புடைய செய்தி