*திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*
திட்டமில்லா பகுதிகளில் 01. 01. 2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு வரைமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒருவாய்ப்பாக 01. 08. 2024 முதல் 31. 01. 2025 வரை 6 மாதகாலம் காலநீட்டிப்பு செய்து, அரசாணை எண் 76. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்(நவ(3)) துறை, நாள் 14. 06. 2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண் 122/நவ4(1) /2024. நாள் 25. 06. 2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் அரசு கடிதம் எண் 15535/நவ4(3)/2019, நாள் 18. 02. 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www. tcp. org. in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ். இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.