திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.125 மதிப்புள்ள Tropicana கொய்யா ஜூஸை ரூ.143-க்கு விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.15,000 அபராதம் விதித்தது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஜூஸை வாங்கிய ராஜா என்பவர் MRPயை விட ரூ.18 அதிகமாக விற்றதால் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அதற்கு எந்த பதிலும் வராததால் நீதிமன்றம் சென்று இழப்பீடு பெற்றுள்ளார்.