தமிழகத்தில் தற்போது உள்ள செட் ஆஃப் பாக்ஸ்கள் 2016-ல் வாங்கப்பட்டவை. அதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. இந்த செட் ஆஃப் பாக்ஸ்கள் பழுதானால் சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் இல்லை. சிக்னல் பிரச்சனை வந்தால் அதை சரி செய்ய ஆட்கள் கிடையாது. எனவே பழைய செட் ஆஃப் பாக்ஸ்களை அரசிடமே ஒப்படைக்க ஆபரேட்டர்கள் முடிவு செய்து வருகின்றனர். HD செட் ஆஃப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வழங்கவில்லை.