சென்னையில் இருந்து 172 பேருடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எந்திரக் கோளாறு காரணமாக விமான நிலைய ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறு கண்டறியப்பட்ட உடனேயே விமானி அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, விமானம் 7 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.