ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக IRCTC மொபைல் ஆப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் ஆப்பை பயன்படுத்துவதால் சர்வர் பிஸியாகி டிக்கெட் கன்ஃபார்ம் ஆவதில்லை. இவர்களின் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, ரயில்வே முக்கிய முடிவை எடுத்துள்ளது. அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் புதிய ஆப்பை ரயில்வே உருவாக்கி வருகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கி அனைத்து வசதிகளும் இந்த ஆப் மூலம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.