வியாசட் நிறுவனத்துடன் இணைந்து BSNL நிறுவனம் Direct – To – Device சோதனை நடத்தியது. அதாவது, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 36,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு செயற்கை கோளை ஆய்வு செய்தது. அதன்படி இந்த சேவை, மொபைல் டவர்கள் இல்லமல் மொபைல் போன்களை நேரடியாக செயற்கைகோள் தொடர்புடன் இணைக்கிறது. இதன் மூலம் தங்கு தடையின்றி நெட்வொர்க் சேவை கிடைக்கும். இது விரைவில் பயன்பாட்டிக்கரு வரலாம் என கூறப்படுகிறது.