தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. Pre Kg முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.1,000 தொடங்கி ரூ.12,000 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. நல வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் அல்லது www.lwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.