திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

69பார்த்தது
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலம் வழியாக ரயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் வியாபாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் இருப்பு பாதையை கடந்து சென்று வந்தனர். தற்பொழுது பழைய ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பொருட்டு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும் புதியதாக இருப்பு பாதை அமைக்கப்பட்டதாலும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில்வே இருப்புப் பாதையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சில சமயங்களில் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இருப்பு பாதைகளிலும் ரயில்கள் நின்று விட்டால் ரயிலின் அடியில் சக்கரத்திற்குள் நுழைந்து சென்று பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் அவல நிலையும் இருந்து வந்தது. 

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் பலதரப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்த ரயில்வே துறை தற்போது இருப்பு பாதையை கடக்கும் பொருட்டு புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி