பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கிய ஆட்சியர்!

68பார்த்தது
பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கிய ஆட்சியர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 8 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்க வேண்டும் என மாதனூர் ஒன்றிய பா. ஜனதா துணைத் தலைவர் ஜெயபாரதி ரமேஷ் கலெக்டர் தர்ப்பகராஜிடம் மனு கொடுத்தார்.

அதன்பேரில் 8 பெண்களுக்கு தையல் எந்திரங்களை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். அப்போது மாதனூர் ஒன்றிய பா. ஜனதா துணைத் தலைவர் ஜெயபாரதி ரமேஷ், வருவாய் ஆய்வாளர் நித்யானந்தம், கிராம நிர்வாக அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி