சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றப்படுகையில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றப்படுகையில் நீரின் ஓட்டத்தை திசை திருப்ப தற்காலிக கால்வாய் அமைக்க பணியாளர்கள் குழி தோண்டி உள்ளனர். அப்போது இரண்டு அடி உயரத்தில் அம்மனின் கற்சிலை ஒன்று கிடைத்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வருவாய்த் துறையினர் கற்சிலையை மீட்டு எடுத்துச் சென்றனர்.