*மோட்டார் வாகன விபத்துகளில் சிக்கியவர்களுக்கு குறித்த நேரத்தில் உதவுவார்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய பணபரிசு*
மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் 15. 10. 2021 அன்று அமல்படுத்திய திட்டத்தின்கீழ் சாலையில் ஏற்படும் மோட்டார் வாகன விபத்துகளில் சிக்கியவர்களுக்கு உதவும் நோக்கில் விரைந்து குறிந்த நேரத்தில் மருத்துவனையில் சேர்த்து உயிரைக்காக்கும் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய ரூ. 5000/- ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இச்செயலினை ஊக்கப்படுத்தும் விதமாக மேலும் தமிழக அரசு 29. 03. 2023 அன்று நடைபெற்ற 2023-2024 நிதியாண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மாநில சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 5000/- வழங்க தமிழக அரசு அனுமதியளித்து ஆணைபிறப்பித்துள்ளது. எனவே சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களின் மருத்துவ சிகிச்கைக்காக துரிதமாக செயல்பட்டு, சேவை மனப்பாண்மையுடன் உதவுபவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழுடன் (நற்கருணைவீரர்) ரூ. 10000/- க்கான ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்பதை அறிந்து, உயிர்காக்கும் சேவையினை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ். இ. ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.