சோளிங்கரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

81பார்த்தது
சோளிங்கரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!
சோளிங்கர் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையர் கன்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பழனி, நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், கவுன்சிலர்கள் அசோகன், ஆஞ்சநேயன் ஆகியோர் கலந்து கொண்டு வேம்பு, புங்கை, காட்டோ, இலுப்பை, உள் ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். சோளிங்கர் நகராட்சியை பசுமை நகராட் சியாக மாற்ற நகராட்சி பகுதியில் உள்ள குளக்கரைகள், பூங்காக்கள் பகுதிகளில் பல் வேறு வகையான பழவகை மரக்கன்றுகள் மற் றும் மூலிகைச் செடிகள் நடவு செய்ய உள்ள னர். அதன் முதல் கட்டமாக குப்பை கிடங்கு அருகே மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது என நகர மன்ற தலைவர், ஆணையாளர் தெரி வித்தனர்.

மேலும் தமிழக அரசு உத்தரவின் பேரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதைக்கொண்டு குப்பை கிடங்குகள் அமைத்து திடக்கழிவு மேலாண்மை திட் டம் செயல்படுத்தப்படும் என்று ஆணையாளர் கன்னியப்பன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி