தெலங்கானாவை சேர்ந்த குன்னா முத்தாலு (56) என்பவரின் மனைவி ரஞ்சிதா கணவருக்கு தெரியாமல் ஒருவரிடம் ரூ. 1.50 லட்சம் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர் கடந்த சனிக்கிழமை (டிச. 22) பணத்தை திருப்பி கேட்டார். மனைவி தனக்கு தெரியாமல் கடன் வாங்கியதை அப்போது தான் குன்னா அறிந்தார். மேலும், அக்கம்பக்கத்தினர் இதை பார்த்ததால் அவமானத்தில் குன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.