ஈரோடு மாவட்டத்தில் அமைந்த முக்கியமான திருக்கோயில்களில் ஒன்றான சென்னிமலை முருகப்பெருமான் ஆலயம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. மூலவரான சென்னிமலை ஆண்டவர், நடுநாயக மூர்த்தியாக ஆலயத்தில் வீற்றிருக்கிறார். இந்த கோயிலுக்கு மேலும் ஒரு பெரும் சிறப்பு உண்டு. அது முருகப்பெருமானுக்கு எல்லா கோயில்களிலும் ஒலிக்கவிடப்படும் 'கந்தசஷ்டி கவசம்' பாடல் அரங்கேறிய திருத்தலம் இதுவாகும்.