மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், இன்று (டிச.23) காலை 10:30 மணிக்கு நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. அதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்குகிறார்.