உ.பி: இளம்பெண் ஒருவர் 8 வருடமாக காதலித்த காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை அறிந்த இளம்பெண், ஆத்திரத்தில் கூரிய கத்தியால் அவரது அந்தரங்க உறுப்புகளை வெட்டியுள்ளார். அதன்பின் அதே கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.