உ.பி., கோட்வாலி பகுதியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. தோஸ்தி நகரில் இருந்து வேகமாக வந்த லாரி மீது பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் மோதினர். இந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் ராம்குமார் மற்றும் விகாஸ் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.