"புஷ்பா 2" பட வெளியீட்டின்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டரில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஐதராபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் செய்தியாளர்கள் சந்திப்பில், "நெரிசலில் சிக்கி பெண் மரணம் மற்றும் சிறுவன் காயமடைந்த தகவல் அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர், திரைப்படம் முடிந்த பின்னர் தியேட்டரை விட்டுசெல்வதாக கூறினார்" என தகவல் அளித்துள்ளனர்.