கலவை அடுத்த மாம்பாக்கத்தில் செய்யாறிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் அனுமதியின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டுள்ளதாக கலவை வட்டாட்சியருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பத்தை இன்று (அக் 1)அகற்றினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.