ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக நேற்று வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த செவிலியர்கள் மகப்பேறு மருத்துவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். அதனால் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றதும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து செவிலியர் பதிலளிக்கும் வீடியோ வைரலாகிறது.