முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி

77பார்த்தது
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி
காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



காட்பாடி வட்ட ரெட் கிராஸ் கிளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேவகன் அறக்கட்டளை இணைந்து மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் அருகில் நாராயண மண்டபவளாகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் காட்பாடி வட்ட கிளை அவை தலைவர் ஜனார்த்தனான், சேவகன் அறக்கட்டளை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்வி உலகம் பள்ளி தலைமை ஆசிரியர் சிவ வடிவு அப்துல் கலாம் நினைவுகளை பற்றி பேசினார்.

தொடர்புடைய செய்தி