இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவதற்கு பின்னணியில் ஆரோக்கியம் நிறைந்த காரணங்கள் உள்ளன. 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.