நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும்: அமைச்சர் ஆர். காந்தி அறிக்கை

72பார்த்தது
நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும்: அமைச்சர் ஆர். காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட தி. மு. க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் மேற்கு திசையில் காற்று மாறுபாடு ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக இயல்பு நிலையை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகவே எப்ரல் மாதத்தில் 108 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. எனவே கோடை வெயிலை சமாளித்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட ஏதுவாக தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைப்படி, இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளும், பிற அணி அமைப்பாளர்களும் தண்ணீர் பந்தல் அமைத்து இளநீர், தர்பூசணி, முலாம்பழம், மோர், குளிர்பானங்கள், நுங்கு, வெள்ளரிகாய் மற்றும் குடிநீர் ஆகியவற்றை கோடை காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி