பிரபல நாளிதழுக்கு தமிழக அரசு கண்டனம்

75பார்த்தது
பிரபல நாளிதழுக்கு தமிழக அரசு கண்டனம்
டில்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள். தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று 15.05.24 அன்று பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்று எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது பிரபல நாளிதழுக்கு உகந்ததல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி