இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரிலும், போருக்கு பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என ஐ.நா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என ஐ.நா கூறியுள்ளது. இது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான சீர்திருத்தங்களை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் பதவியில் நீடிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.