இந்திய கடற்படையினர் 14 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர். அந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை சட்டவிரோதமாக கடந்தனர். அவர்கள் ஐந்து படகுகளில் வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் கடந்த மே 14ம் தேதி ஐஎம்பிஎல் (India maritime border length) தாண்டி கடல் வெள்ளரி மீன்களை வேட்டையாட வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கடற்பரப்பில் இருந்து 7 கடல் மைல்களுக்குள் இலங்கை மீன்பிடி படகுகள் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.