டாஸ்மார்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

76பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகர் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்தப் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை 25 மீட்டர் தூரமே உள்ளதாகவும் அருகாமையில் ரோட்டரி மருத்துவமனை 50 மீட்டரில் அமைந்துள்ளதாகவும், எந்த இடத்தை சுற்றி ஜே ஜே நகர் பெருமாள் நகர் ராகவேந்திரா நகர் சுண்ணாம்புப்பேட்டை ராஜகணபதி நகர் திருமலை கார்டன் போன்ற அனைத்து குடியிருப்புகளும் உள்ளன.

மேலும் மேல் ஆலத்தூர் செல்ல புதிய ஒரு வழிப்பாதை ஆற்று கடந்து செல்ல அமைத்து வருவதால் போக்குவரத்து மிகுந்த பகுதியாகவும் உள்ளது.

எனவே குடியிருப்புகளுக்கு மற்றும் பள்ளி மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்படும் இந்த புதிய டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி