குடியாத்தம்: கே. எம். ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா!

78பார்த்தது
குடியாத்தம்: கே. எம். ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே. எம். ஜி. கலை அறிவியல் கல்லூரியின் 24-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மு. செந்தில்ராஜ் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே. எம். ஜி. பாலசுப்பிரமணியம், தலைவர் கே. எம். ஜி. சுந்தரவதனம், செயலாளர் கே. எம். ஜி. ராஜேந்திரன், பொருளாளர் கே. எம். ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் ரா. ரஞ்சிதம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவி ஏ. அனுசபிரியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

குடியாத்தம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் வி. சி. வினோத் கலந்து கொண்டு இக்கல்லூரி நிர்வாகிகள் மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பங்களிப்பை நல்கி வருகின்றனர். மாணவர்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி இக்கல்லூரியை பல்கலைக்கழக அளவில் பெருமைப்படுத்தியதை போன்று, எதிர்காலத்தில் இந்திய திருநாட்டையும் உலக அளவில் பெருமைப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி