புதுச்சேரி முதல்வர் படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர்!

586பார்த்தது
புதுச்சேரி முதல்வர் படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி புதுச்சேரி அடுத்துள்ள விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதனையொட்டி, கிழக்கு கடற்கரைச்சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் விஜய் படத்துடன் முதல்வர் ரங்கசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் ‘2026-ல் ஆளப்போறான் தமிழன்’ என்ற வாசகத்துடன் வேட்டி - சட்டையுடன் விஜய் நடந்து வருவது போலவும், மறுபுறம் முதல்வர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போலவும் இடம் பெற்ற பேனரில் ஒரு புறத்தில் முதல்வர் ரங்கசாமி படமும் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி