சென்னையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரியமேட்டில் பீகாரைச் சேர்ந்த அகமது சையது (47) என்பவர் கடையொன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், தனது கடையில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சையது அகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.