2022-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,002 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 215, அசாமில் 163, தமிழ்நாட்டில் 155, மேற்கு வங்கத்தில் 121, மகாராஷ்டிராவில் 99 குழந்தை திருமணங்களும் நடந்துள்ளன. பெண் கல்வியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்னேறியிருந்தாலும் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவது ஏன்? என்ற மக்களிடையே ஏற்பட்டுள்ளது.