கீழ ஆலந்தூரில் கெங்கையம்மன் சிரசத் திருவிழா

65பார்த்தது
கே. வி. குப்பம், ஏப். 29- கே வி குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் கெங்கையம்மன் சிரச திருவிழா நடந்தது. விழா முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சாமிகள் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில்  வீதியுலா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கீழ ஆலத்தூர் கிராமத்தில் பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக வந்தது. பின்னர் கோயிலில் அம்மன் சிரசு ஏற்றப்பட்டது. விழாவில் உள்ளூர் வெளியூர் வெளி மாநிலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். புத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6: 00 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி