*மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர்*
*முதலுதவி சிகிசசை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு*
*வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது*
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது இதில் மனு அளிக்க வந்த வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (62) என்பவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் பென்ட்லான்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் பிரகாஷ் என்பவர் மனு அளித்த தனியாக வந்ததால் எதற்காக மனு அளிக்க வந்தார் என்ற விவரம் தெரியவில்லை மேலும் பரிசோதித்த செவிலியர் நீங்கள் காலையில் வழக்கம்போல் சாப்பிட்டீங்களா எனக் கேட்டதற்கு நான் காலையில் உணவு அருந்தவில்லை எனக்கு கூறினார் செவிலியர் பரிசோதித்ததில் பிபி அதிகமாக இருந்த இருந்ததால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் மேலும் மருத்துவர் பரிசோதனைக்கு பின்பு விவரங்கள் தெரியவரும்
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.