ஒன்பது மாத கர்ப்பிணி மீது விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து

4645பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரிய புதூரை பகுதியை சேர்ந்தவர்கள் அனிதா, ராபர்ட் தம்பதியினர். அனிதா தற்பொழுது ஒன்பது மாதம் கர்ப்பிணியாக இருந்து வந்த சூழ்நிலையில் இன்று தனது உடல் பரிசோதனைக்காக கணவர் ராபர்ட் உடன் இருசக்கர வாகனத்தில் பெரிய புதூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது காட்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது அரசு பேருந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி பெண் அனிதா படுகாயம் அடைந்தார். அவரது கணவர் ராபர்ட் காயமடைந்த சூழ்நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனிதா வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

கர்ப்பிணி பெண் விபத்துக்குள்ளாகி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி