கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு

75பார்த்தது
கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
காட்பாடியில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு.

வேலூர் மாவட்டம் காட்பாடி கோட்டையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து தொழிலாளி இவர் கடந்த 25ஆம் தேதி இரவு மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு சென்று மாட்டு கொட்டகைகள் உள்ள கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார் காலையில் பார்த்த பொழுது அவர் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து காட்பாடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பால வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி