திருக்குறள் போட்டிகளின் கீழ் தங்களது படைப்புகளை அனுப்புவதற்கு 2 நாட்களே உள்ளன. கன்னியாகுமரியில் தமிழகத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி, அரசு சார்பில் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகிறது. திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரைப் போட்டி, குறும்பட போட்டி, கவிதைப் போட்டி, செல்பி போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றது. விவரங்களுக்கு tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.