கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர், பவர் வீடர் கருவிகள் வழங்கப்படுவதாக ஆட்சியர் சிபி ஆதியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். "மாநிலம் முழுவதும் 4000 பவர் டில்லர், 4000 பவர் வீடர் கருவிகளை வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் கடலூர் விவசாயிகளுக்கு 51 பவர் டில்லர்கள் மற்றும் 59 பவர் வீடர்கள் வழங்க இலக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.