ஒட்டிய இரட்டை தலையுடன் என்ற பசு. பால் குடிக்க முடியாமல் அவதிப்படும் கன்று.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த பெரிய பொன்னேரி கிராமத்தில் வசித்து வருவார் விவசாயி ராஜதுரை இவர் வளர்த்து வரக்கூடிய பசு மாடு கன்று குட்டியை ஈன்றெடுத்து அது சாதாரண கன்று போல் இல்லாமல் இரட்டை தலையுடன் பிறந்துள்ளது.
இந்த கன்று குட்டிக்கு இரண்டு தலை, இரண்டு மூக்கு, இரண்டு நாக்கு இரண்டு காதுகளுடன் நான்கு கண்களுடன் காணப்படுகிறது ஆனால் 4 கண்களில் இரண்டு கண்களில் மட்டுமே கன்று பார்க்க முடிகிறது. தலை அதிக கனத்துடன் உள்ளதால் தலையை தூக்க முடியாமல் கன்று சிரமப்படுகிறது. மற்ற கன்றுகளில் இருந்து வேறுபட்டு காணப்படும் இந்த அதிசய பெண் கன்றைக்கான அப்பகுதியைச் சார்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்வதுடன் செல்போனில் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு இரட்டை தலையுடன் பிறப்பதற்கு மரபணுக்கள் மட்டுமே காரணமாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற கன்றுகள் நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருப்பது கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.