113 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா.

52பார்த்தது
*நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 113-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா! ஆடுவெட்டி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்! *

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றின் வடகரை எழுந்தருளி அருள் பாவித்து கொண்டிருக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 113 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்று வருகிறது

மேலும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. அம்மன் தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது.


இந்த திருவிழாவில் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதல் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தனர். அதனை தொடர்ந்து ஆடு வெட்டியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஒரு டன் அரிசி அளவில் அன்னதனம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி