மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பம் உலக சாதனை நிகழ்வு

69பார்த்தது
வேலூர் மாவட்டம்

*காட்பாடி அருகே 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
பங்கேற்ற சிலம்பம் உலக சாதனை நிகழ்வு*

*ஒரு மணி நேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி*

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி வேல் நகரில் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்ப கழகம் மற்றும் டைகர் புக் ஆஃப் வேல்ட்டு ரெக்காட்ஸ் இணைந்து நடத்திய சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி சிலம்பம் பயிற்சியாளர் சந்தோஷ்குமார் தலைமையில்
நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் வி. ராமு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்

இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 1மணி நேரம் 10 நிமிடத்தில் 3150 சுற்றுகள் சிலம்பம் சுற்றி டைகர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கக்கார்ட்ஸில் இடம் பெற்று உலக சாதனையை நிகழ்த்தினர்

சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினார்.

ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சிலம்பம் பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி