தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நடத்த திட்டமிட்ட நிலையில் அதற்கான இடத்தை வழங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, “கார் ரேஸ் நடத்த ஒரே நாளில் அனுமதி பெற முடிகிறது. ஆனால், விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி தருவதில் என்ன தாமதம்?. கேள்வி மேல் கேள்வி கேட்டு தவெக மாநாட்டிற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். விஜய்யின் கட்சியையும் தடுக்கிறார்கள், அவரது படத்தின் காட்சிக்கும் தடை விதிக்கிறார்கள்” என கொந்தளித்தார்.