காட்டு யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு

69பார்த்தது
கே வி குப்பம் அடுத்த நாகல், தேவரிஷி குப்பம், காங்க்குப்பம், மேல் மாங்குப்பம், துருவம், பனமடங்கி, கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, தொண்டான் துளசி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இங்கு தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அன்று நள்ளிரவு முதல் இரு நாட்களாக கே வி குப்பம் அடுத்த பணமடங்கி ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் பல்லகொள்ளை தேக்கு மரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தில் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சாப்பிட்டு மிதித்து சேதப்படுத்தி இருந்தது. தொடர்ந்து அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மா தென்னை வாழை பப்பாளி மரங்கள் உள்ளிட்டவை உடைத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது விளைநிலத்தில் உள்ள காட்டு யானைகள் சேதப்படுத்திய பயிர்களை கணக்கீடு செய்து விஏஓ மூலம் வனத்துறைக்கும் ஒப்படைத்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் கிராம பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தினை தடுக்க வனத்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது யானைகள் உள்ளதா என வானவர் அருணா தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் யானைகள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி