ஆபாச பட வழக்கு.. நீதிபதிக்கு கடும் கண்டனம்

81பார்த்தது
ஆபாச பட வழக்கு.. நீதிபதிக்கு கடும் கண்டனம்
ஆபாச படங்கள் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தை கூற முடியும் என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து கொடுமையானது என கூறியுள்ளார்.குழந்தைகள் அடங்கிய ஆபாச படங்களை பார்த்த இளைஞருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி