காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக மக்களவை உறுப்பினர்

64பார்த்தது
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக மக்களவை உறுப்பினர்
பாஜகவில் இருந்து விலகிய ராஜஸ்தான் மாநிலம் சூரூ மக்களவை உறுப்பினர் ராகுல் கஸ்வான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த நாளிலேயே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ராஜஸ்தான் மாநில பாஜகவின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.