முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பாஜகவில் இணைந்தார்

592பார்த்தது
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பாஜகவில் இணைந்தார்
சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார். பாஜக அலுவலகமான கமலாலயத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, அண்ணாமலை பிற கட்சியில் இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பதில் குறியாக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில், தற்போது ராஜலட்சுமியும் இணைந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி