ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

71பார்த்தது
ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் படி ஒவ்வொரு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் ஆட்சியர் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் வட்டத்தில் இன்று (புதன்கிழமை) 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட் டம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி ஆட்சியர் உள்பட மாவட்ட நிலையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு அரசு திட்டப் பணிகள், அரசு சேவைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

சோளிங்கர் வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை சோளிங்கர், வேலம், பாணாவரம், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் சோளிங்கர் தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன் பெறலாம்.

நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் காலை 8. 30 வரை திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள், குடிநீர் வினியோகம், பொது போக்குவரத்து, முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தால் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் செய்ய உள்ளனர் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :