அரக்கோணம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில் அனுமதி முடிந்த கல்குவாரியில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக்காலங்களில் இன்னும் அதிகமான தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் ஆத்தூர் கிராம நிர்வாக அலுவலர் நெடுஞ்செழியன், உதவியாளர் ரமேஷ் ஆகியோர் இன்று கல்குவாரி அருகில் எச்சரிக்கை பேனர் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்