ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா!

80பார்த்தது
ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த ரெட்டிவலம் கிராமத்தில் உள்ள ஆண்டாள் கோவில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக காலையில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

பின்னர், யாக சாலையில் இருந்து வேதமந்திரங்கள் ஓதியவாறு கலசங்கள் கோபுரத்தின் மீது எடுத்து சென்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோவில் கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டு பறந்தது. இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோவிந்தா, கோவிந்தா என்று முழக்கமிட்டனர்.

இதில் அகவலம், பனப்பாக்கம், வேட்டாங்குளம், திருமால்பூர், எஸ். கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி