அரக்கோணம் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக
தொடர்ந்து நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன.
இந்தநிலையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் சுதாகர்
மற்றும் ஊழியர்கள் எஸ். ஆர். கேட், பழனிபேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பழைய பஜார் தெருவில் இருந்த கடைகளில்
மறைத்து வைத்திருந்த சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு இருந்து ரூ. 13
ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இது போன்று பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தினாலோ, விற்பனை செய்தால் தாலோ கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையாளர் எச்சரித்தார்.